
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ஷிகர் தவான் 40 ரன்களும், கே.எல் ராகுல் 30 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
அதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷுப்மன் கில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்துவிட்டு, 97 பந்துகளில் 130 ரன்கள் எடுத்தார். நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய இஷான் கிஷன் 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.