இணையத்தில் வைரலாகும் இமாலய சிக்சர்; வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளாசிய சிக்சர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
Trending
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷிகர் தவான் அரைசதம் அடித்த கையோடு 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை இந்திய அணி எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது.
Shubman Gill!!#Cricket #WIvIND #IndianCricket #TeamIndia #ShubmanGill pic.twitter.com/GhKEMuMvjo
— CRICKETNMORE (@cricketnmore) July 27, 2022
இருப்பினும் இப்போட்டியில் ஷுப்மன் கில் விளாசிய இமாலய சிக்சர் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹெய்டன் வால்ஷ் வீசிய 15ஆவது ஓவரில் சுப்மன் கில் ஒரு இமாலய சிக்சரை விளாசினார்.
அந்த சிக்சர் 104 மீட்டர்களை கடந்ததுடன், மைதானத்தை விட்டு வெளியேவும் சென்றது. தற்போது இந்த சிக்சர் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now