Advertisement

ரஸாவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!

சிக்கந்தர் ரஸாவை ரவிச்சந்திரன் அஸ்வின் க்ளீன் போல்டாக்கிய கணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan April 05, 2023 • 23:06 PM
Sikandar Raza Became Clean Bowled By Ravichandran Ashwins Spin Watch Video
Sikandar Raza Became Clean Bowled By Ravichandran Ashwins Spin Watch Video (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடி 90 ரன் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்சே ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

Trending


இதையடுத்து ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ரன்னிலும், ஷாருக் கான் 11 ரன்னிலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இந்நிலையில், பஞ்சாப் வீரர் சிக்கந்தர் ரஸாவை சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அற்புதமான டெவலிரியின் மூலம் க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். தற்போது இக்காணொளி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement