எங்கள் திட்டங்கள் சரியான வழியில் செல்லவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
ஒவ்வொரு முறையும் நாங்கள் முன்னேற முயற்சிக்கிறோம், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அது வழியில் செல்லவில்லை என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 77 ரன்களைச் சேர்த்தார். மேற்கொண்டு அபிஷேக் போரேல் 33 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் மீண்டும் சோபிக்க தவறினர். இதில் விஜய் சங்க 69 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்ப, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தும் அசத்தியது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “கடந்த சில ஆட்டங்களாகவே எங்கள் திட்டங்கள் சரியான வழியில் செல்லவில்லை. ஒவ்வொரு முறையும் நாங்கள் முன்னேற முயற்சிக்கிறோம், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அது வழியில் செல்லவில்லை. இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதேபோல் பந்துவீச்சின் போதும் பவர்பிளேவில் ரன்களைத் தடுக்க தவறிவிட்டோம்.
இந்த போட்டியில் பந்துவீச்சில் நாங்கள் 15-20 ரன்கள் கூடுதலாகக் கொடுத்துள்ளோம். பவர்பிளேயில் யார் பந்து வீசினாலும் நாங்கள் சற்று அதிகமாக கவலைப்படுகிறோம் அல்லது தற்காலிகமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மேலும் பேட்டிங்கைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு கூடுதல் விக்கெட்டை இழக்க விரும்பவில்லை, ஆனால் அது நேர்மறையாக இருப்பது பற்றியது. இது வரிசை வீரர்கள் மீதான அழுத்ததை குறைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
விஷயங்களைச் செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் விஷயங்களைச் செயல்படுத்த வேண்டும். இப்போட்டியின் தொடக்கம் முதலே நாங்கள் மிகவும் பின்தங்கியிருந்தோம், எங்களிடம் ஒரு பேட்டர் மட்டுமே எஞ்சியிருந்தார். இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மிகவும் நன்றாக பந்து வீசினார் மற்றும் நிலைமைகளை மிகவும் நன்றாகப் பயன்படுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now