
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் யில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது .
இதனைத் தொடர்ந்து இந்தியா அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது . அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் . ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு சமீபகாலமாக டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது .
இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பும்ரா தலைமையில் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பு பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியை தலைமை ஏற்று வழி நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா மற்றும் பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரின் பார்ம் மற்றும் உடல் தகுதி முக்கியமானதாக கருதப்படுகிறது.