அவர்கள் இருவரும் பெரியளவில் உதவியாக இருப்பார்கள் - விராட் கோலி
ஆர்சிபி அணியில் இணைந்துள்ள வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரும் பெரியளவில் உதவிகரமாக இருப்பார்கள் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.
இந்த சீசனின் எஞ்சிய போட்டிகள் இன்று (செப்டம்பர் 19) முதல் அமீரகத்தில் நடக்கிறது. இந்த சீசனின் முதல் பாதியை சிறப்பாக முடித்துள்ள ஆர்சிபி அணி, 2ஆவது பாதியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் முனைப்பில் உள்ளது.
Trending
இந்நிலையில், ஆர்சிபி அணியில் விளையாடிய ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு மாற்று வீரர்களாக இலங்கையைச் சேர்ந்த வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில், அவர்கள் குவித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி, “அமீரக கண்டிஷனை நன்கு அறிந்த மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த அனுபவம் கொண்ட திறமையான வீரர்களான ஹசரங்கா,சமீரா ஆகிய இருவரும் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now