
Skipper Kohli Completes Quarantine, Joins Team Bangalore For First Practice Session (Image Source: Google)
கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடர், தற்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த இந்திய மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அமீரகம் வந்தடைந்தார். அங்களு 6 நாள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருந்த அவர், தனிமைப்படுத்துதலை முடித்துள்ளார்.
இதையடுத்து அவர் சக அணி வீரர்களுடன் இணைந்து இன்று முதல் நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விராட் கோலி சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுவரும் காணொளியை ஆர்சிபி அணி நிர்வாகம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.