Advertisement

SL vs AFG, Asia Cup 2023: குசால் மெண்டிஸ் அரைசதம்; ஆஃப்கானுக்கு 292 டார்கெட்!

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
SL vs AFG, Asia Cup 2023: குசால் மெண்டிஸ் அரைசதம்; ஆஃப்கானுக்கு 280 டார்கெட்!
SL vs AFG, Asia Cup 2023: குசால் மெண்டிஸ் அரைசதம்; ஆஃப்கானுக்கு 280 டார்கெட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 05, 2023 • 06:34 PM


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேச அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  இந்நிலையில் இன்று நடைபெறும் 6ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 05, 2023 • 06:34 PM

லாகூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. மேலும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக தகுதிபெறும். அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் மிகப்பெரும் வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

Trending

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கருணரத்னே 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமாவும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - சரித் அசலங்கா இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் சரித் அசலங்கா 36 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 14 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குசால் மெண்டிஸ் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 91 ரன்களில் ரன் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். 

இறுதியில் துனித் வெல்லலகே - மஹீஷ் தீக்‌ஷனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தது. இதில் தீக்‌ஷனா 28 ரன்களையும், வெல்லலகே 33 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement