Advertisement

இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 10, 2024 • 22:22 PM
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் ஒருநாள் போட்டியில் இறுதிவரை போராடியும் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயலும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
  • நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக அறியப்படுகிறது. இங்கு பந்துவீச்சாளர்கள் பிட்சியிலிருந்து திருப்பம் மற்றும் பிடியைப் பெற உதவுகிறது. இதனை பயன்படுத்தி பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டார் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறலாம். மேலும் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேரலை 

இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட் டென் 5 சேனலில் நேரலையில் காணலாம். அதேசமயம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 13
  • இலங்கை - 08
  • ஆஃப்கானிஸ்தான் - 04
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), முகமது நபி, இக்ராம் அலிகில், குல்பதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நூர் அஹ்மத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத் மலிக்.

இலங்கை: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரஹ்மனுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ்: பதும் நிஷங்கா, இப்ராஹிம் ஸத்ரான்
  • ஆல்-ரவுண்டர்கள்: முகமது நபி (துணை கேப்டன்), குல்பதீன் நைப், வநிந்து ஹசரங்கா (கேப்டன்), அஸ்மதுல்லா ஒமர்சாய்
  • பந்து வீச்சாளர்கள்: மஹீஷ் தீக்ஷனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement