SL vs AUS, 2nd ODI: கம்மின்ஸ் வேகத்தில் சரிந்தது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி பல்லகலேவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 14 ரன்களிலும், தனுஷ்கா குனத்திலகா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - தனஞ்செய டி செல்வா பொறுப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
Trending
பின்னர் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி சில்வா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸும் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 13 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வந்த கேப்டன் தசுன் ஷனகா அதிரடியாக விளையாடி 34 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் வந்த வீரர்களும் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் 49.4 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு டக்வெர்த் லூயிஸ் முறைப்படி 43 ஓவர்களில் 213 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now