
SL vs AUS, 3rd T20I: Australia finishes off 176/5 on their 20 overs (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பல்லகலேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஆரோன் ஃபிஞ்ச் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 29 ரன்கள் எடுத்திருந்த ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, அடுத்து வந்த க்ளென் மேக்ஸ்வெல்லும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.