
Sri Lanka vs Bangladesh 1st ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் தொடரை வென்றுள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பிலும், மறுபக்கம் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வங்கதேசமும் விளையாடும் என்பதாலும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL vs BAN 1st ODI Match Details