
SL vs BAN 1st T20I, Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது இதில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடனும், மறுபக்கம் வங்கதேச அணி அடுத்தடுத்து தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. மேலும் இரு அணிகளிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
SL vs BAN: Match Details
- மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
- இடம் - பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லகலே
- நேரம்- ஜூன் 10, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
SL vs BAN: Live Streaming Details
இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் இந்திய ரசிகர்கள் நேரலையில் கணலாம்.
SL vs BAN: Head-to-Head in T20Is
- Total Matches: 17
- Sri Lanka: 11
- Bangladesh: 6
- No Result: 0