
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 541 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ஆவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 512 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கருணாரத்னே 234 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 154 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 648 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கருணாரத்னே 244 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 166 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
107 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் இந்த டெஸ்ட் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது.