
SL vs BAN, 2nd ODI: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி வீரர் தன்விர் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த பர்வேஸ் ஹொசைன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பர்வேஸ் ஹொசைன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வேஸ் ஹொசைன் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.