
SL vs BAN, 2nd T20I: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் கேப்டன் லிட்டன் தாஸ் 76 ரன்களையும், ஷமிம் ஹொசைன் 48 ரன்களையும் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்கம் வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் எமான் ரன்கள் ஏதுமின்றியும், தன்ஸித் ஹச்ன் தமிம் 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் தாவ்ஹித் ஹிரிடோய் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.