
BAN vs SL Match 5, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே ஹாங்காங் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் இலங்கை அணி சமீபத்தில் தான் ஜிம்பாப்வே டி20 தொடரை வென்று ஆசிய கோப்பையில் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.