
Sri Lanka vs India 1st T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று (ஜூலை 27) முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இன்று நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்
இந்திய அணி
இந்திய அணியானது புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் காணும் முதல் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடருக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்லும், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ரியான் பராக் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கிண்டனர்.