SL vs IND, 3rd T20I: இலங்கையை வைட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்த வரையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். அதேசமயம் கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இருப்பினும் இன்றைய போட்டியிலும் அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதவிர்த்து இத்தொடரில் இதுவரை வாய்ப்பு பெறாமல் இருந்துவரும் ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் பந்துவீச்சு என இரு துறையிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய உத்தேச லெவன் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பந்த், ரியான் பராக், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா/ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/ வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்/ கலீல் அஹ்மத், முகமது சிராஜ்.
இலங்கை அணி
மறுபக்கம் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து ஏமாற்றமளித்து வருகிறது. அந்த அணியில் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், அணியின் மற்ற பேட்டர்கள் அனைவரும் தொடர்ந்து சோபிக்க தவறிவருவது அணியின் படுதோல்விக்கு வழிவகுத்துள்ளது.
மறுபக்கம் பந்துவீச்சில் மதீஷா பதிரானா அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. அவருக்கு துணையாக மஹீஷ் தீக்ஷனா, வநிந்து ஹசரங்கா உள்ளிட்ட வீரர்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஆனாலும் மற்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறிவருவதால், இந்திய அணியின் ரன் குவிப்பை தடுக்க இலங்கை அணி தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை உத்தேச லெவன் : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசால் மெண்டிஸ்,சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷ பதிரானா, அசிதா ஃபெர்னாண்டோ.
Sri Lanka vs India 3rd T20I Dream11 Team
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ், சஞ்சு சாம்சன்
பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், பதும் நிஷங்கா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், குசால் பெரேரா
ஆல்ரவுண்டர்கள் - அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், மதீஷா பதிரானா
Win Big, Make Your Cricket Tales Now