
sl-vs-ind-intra-sqaud-match-highlights (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான முக்கிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் இலங்கையுடன் ஷிகர் தவான் தலைமையிலான மற்றோரு அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி 20 பேர் அடங்கிய இந்திய அணி கடந்த வாரம் இங்கிலாந்து சென்றடைந்து, 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, தங்களுக்குள்ளாக இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய காணொளி தற்போது வெளியாகி இணையத்தி வைரலாகி வருகிறது.