Advertisement

IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisement
SL vs IND, Preview: India Set Sight On Last T20 Series Before World Cup
SL vs IND, Preview: India Set Sight On Last T20 Series Before World Cup (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 25, 2021 • 10:08 AM


ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 25, 2021 • 10:08 AM

அதன்படி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்றிரவு நடக்கிறது. நடப்பாண்டு டி20  உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20  தொடர் இது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

இந்திய அணி 

ஒரு நாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் கலக்கிய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதில் 5 புதுமுகங்களை பயன்படுத்தி பார்த்த இந்திய அணி பீல்டிங்கிலும் தடுமாறியது. 

இதனால் இன்றைய ஆட்டத்தில் முழுமையான அணியாக இந்தியா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அதிரடி வீரர்கள் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் பேட்டிங்கில் அசத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேசமயம் பந்துவீச்சில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இலங்கை அணி

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, கடைசி ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் இன்றையப் போட்டியில் களம்காணவுள்ளது. 

அதிலும் கடைசி போட்டியில் அசத்திய ராஜபக்க்ஷ, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இப்போட்டியிலும் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

பந்துவீச்சில் தனஞ்செயா, ஜெயவிக்ரமா, சமீரா ஆகியோர் இந்திய அணிக்கு நிச்சயம் சவாலை வழங்குவர் என்று கணிக்கப்படுகிறது.

நேருக்கு நேர்

இரு அணிகளும் இதுவரை 19 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 முறை இந்தியாவும், 5 முறை இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டி முடிவின்றி அமைந்துள்ளது. 

உத்தேச அணி 

இந்தியா: பிரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா அல்லது கிருஷ்ணப்பா கவுதம், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ராகுல் சாஹர்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, ஹசரங்கா அல்லது ஜெயவிக்ரமா, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement