SL vs IRE 2nd Test: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் கலே மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய அயர்லாந்து அணி ஸ்டிர்லிங் மற்றும் காம்பேரின் அபார சதத்தினால் முதல் இன்னிங்ஸில் 492 ரன்களை குவித்தது. . இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணியும் அபாரமான பதிலடி கொடுத்தது .
Trending
அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச் சிறப்பாக விளையாடினர் . இரண்டு வீரர்கள் இரட்டை சதமும் இரண்டு வீரர்கள் சதமும் எடுத்து 704 ரன்கள் டிக்ளேர் செய்தது . அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிசான் மதுசங்கா அபாரமாக விளையாடி 205 ரன்களையும் கேப்டன் கருநரத்தனே 115 ரங்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் நூறு ரண்களையும் எடுத்தனர் . அதிரடியாக விளையாடிய குஷால் மெண்டிஸ் 11 சிக்ஸர்களுடன் 245 ரன்கள் எடுத்தார்
இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய அயர்லாந்து அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது . இந்நிலையில் தொடர்ந்து போராடிய அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை முறியடிக்க 10 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்திருந்தார் . மேலும் அந்த அணியின் கேப்டன் பால்பிரினி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளையும், அசித்தா ஃபெர்னான்டோ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரபாத் ஜெயசூர்யா . இதற்கு முன் இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸின் சுழற் பந்துவீச்சாளர் ஆல்ப் வேலன்டைன் என்பவர் படைத்திருந்தார் .
அவர் எட்டு போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதனையாக இருந்தது . இதனை இன்று முறியடித்திருக்கிறார் பிரபாத் ஜெயசூர்யா . இந்த சாதனை 72 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டிருக்கிறது . வேலன்டைன் 1951 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருந்தார் . இதனை 2023 ஆம் ஆண்டு பிரபாத் ஜெயசூர்யா முறியடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now