
Sri Lanka vs New Zealand 3rd ODI Dream11 Prediction: நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணியானது இரண்டிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (நவ.19 )பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கான பதிலடி கொடுப்பதுடன், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதல் தேடமுயற்சிக்கும். இதனால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பாப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
SL vs NZ 3rd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
- இடம் - பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லகலே
- நேரம் - நவம்பர் 17, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)