
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள எஸ் எஸ் சி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு சுருண்டது.
இதில் அதிகபட்சமாக தனஞ்செய்ய டி சில்வா 57 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் விளையாட களம் இறங்கியது. இதில் இமாம் உல் ஹக் 6 ரன்களில் வெளியேற, அந்த அணியின் இளம் வீரர் அப்துல்லா ஷபிக் 165 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.ஷான் மசூத் அரைசதம் எடுக்க கேப்டன் பாபர் அஸாம் 39 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இந்த நிலையில் 27 வயதான சவுத் ஷக்கில் தற்போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சௌத் ஷகில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சௌத் ஷகில் 141 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.