Advertisement

SL vs SA: மகாராஜ், ஷம்ஸி பந்துவீச்சில் வீழ்த்தது இலங்கை!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 07, 2021 • 18:05 PM
SL vs SA, 3rd ODI: Sri Lanka end up with 203
SL vs SA, 3rd ODI: Sri Lanka end up with 203 (Image Source: Google)
Advertisement

இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி விளையாடிய இலங்கை அணியில் சண்டிமல் 9 ரன்களிலும், ஃபெர்னாண்டோ 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா - சரித் அசலங்கா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

Trending


இதிஉல் சில்வா 31 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்காவும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

இதனால் 50  ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேப்டம் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement