
SL vs SA: Sri Lanka finishes off 120 runs (Image Source: Google)
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி கள்மிறங்கிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் அவருடன் விளையாடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 12, தனஞ்செய டி சில்வா 1, ராஜபக்ஷ 5, மெண்டிஸ் 10 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினர்.
பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேராவும் 39 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.