
SL vs SA: Sri Lanka won A first ODI series win in 18 months (Image Source: Google)
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தினேஷ் சண்டிமல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. இதில் சரித் அசலங்கா 47 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.