
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்பாடி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - பிராண்டான் கிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான அலிக் அதானாஸும் 10 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த கேப்டன் ஷாய் ஹோப்பும் 5 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த கேசி கார்டி மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.