
Sri Lanka vs West Indies 1st Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அக்டோபர் 13ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அக்டோபர் 20ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இலங்கை அணியோ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பிறகு எதிர்கொள்ளும் முதல் டி20 தொடர் இதுவாகும். இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL vs WI 1st T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புளா
- நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)