Advertisement
Advertisement
Advertisement

இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்று கடைசி ஒருநாள் போடி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது.

Advertisement
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 25, 2024 • 04:29 PM

Sri Lanka vs West Indies 3rd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 25, 2024 • 04:29 PM

இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே தொடரை இழந்த கையோடும், இலங்கை அணி தொடரை வென்ற கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இதில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியிலும் விளையாடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

SL vs WI 3rd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லகலே
  • நேரம் - அக்.26 மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

SL vs WI 3rd ODI: Pitch Report

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 44 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 25 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 253 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 381 ரன்களும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SL vs WI 3rd ODI: Where to Watch?

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.  

SL vs WI 3rd ODI: Head To Head Record

  • மொத்தம் - 66
  • இலங்கை - 31
  • வெஸ்ட் இண்டீஸ் - 32
  • முடிவில்லை - 03

Sri Lanka vs West Indies 3rd ODI: Probable Playing XI

இலங்கை உத்தேச லெவன்: நிஷான் மதுஷ்க, பதும் நிஷங்கா/அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கே), சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வான்டர்சே, அசித்த ஃபெர்னாண்டோ

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (கே), ரோஸ்டன் சேஸ், கேசி கார்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேய்டன் வால்ஷ், குடகேஷ் மோட்டி, ஜேடன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப்

Sri Lanka vs West Indies 3rd ODI Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்கா, ஷாய் ஹோப்
  • பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, பிராண்டன் கிங் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - வநிந்து ஹசரங்கா (துணைக் கேப்டன்), சரித் அசலங்கா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள் - மஹீஷ் தீக்ஷானா, குடகேஷ் மோட்டி

SL vs WI 3rd ODI Dream11 Prediction, Today Match SL vs WI, SL vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs WI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs West Indies

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement