
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs ஜிம்பாப்வே
- இடம் - ஆர்.பிரமதோசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
- நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)