
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் போராடி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்தியதோடு, தொடரையும் சமன் செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs ஜிம்பாப்வே
- இடம் - ஆர்.பிரமதோசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
- நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)