
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs தாய்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Sri Lanka Women vs Thailand Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில், தாய்லாந்து அணி விளையாடிய இரு போட்டிகளில், ஒரு வெற்றி, ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL-W vs TL-W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை மகளிர் vs தாய்லாந்து மகளிர்
- இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
- நேரம் - ஜூலை 24, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
SL-W vs TL-W Pitch Report