
SLK vs GUY Final Caribbean Premier League 2024, Dream11 Prediction:வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நடப்பு சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதாலும், இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதாலும் இதில் எந்த அணி வெற்றிபெற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SLK vs GUY Final: Match Details
- மோதும் அணிகள்- செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
- இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - அக்டோபர் 7, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
SLK vs GUY Final: Ground Pitch Report
இந்த மைதானத்தில் இதுவரை 38 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 16 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.
SLK vs GUY Final: Head-to-Head
- Total Matches: 24
- Saint Lucia Kings: 9
- Guyana Amazon Warriors: 15
- No Result: 00