
Sri Lanka Women vs India Women Dream11 Prediction, Final ODI Tri Series: இறுதியில் இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL-W vs IN-W ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை மகளிர் vs இந்திய மகளிர்
- இடம் - ஆர். பிரமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
- நேரம்- மே 11, காலை 10 மணி (இந்திய நேரப்படி)