Advertisement

சையத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் பந்துவீச்சில் 151 ரன்னில் சுருண்டது கர்நாடகா!

தமிழ்நாடு அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 22, 2021 • 13:38 PM
SMAT 2021 Final: Tamil Nadu restricted Karnataka by 151 runs
SMAT 2021 Final: Tamil Nadu restricted Karnataka by 151 runs (Image Source: Google)
Advertisement

நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரர் ரோஹன் கதம் ரன் ஏதுமின்றி சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

Trending


அடுத்து வந்த கேப்டன் மனீஷ் பாண்டே, கருண் நாயர், பரத் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, கர்நாடக அணியின் ரன் வேகம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. 

பின் 4ஆவது விக்கெட்டாக களமிறங்கிய அபிநவ் மனோகர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனோகர் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

அடுத்து களமிறங்கிய பிரவீன் தூபே இறுதியில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கர்நாடக அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: T20 World Cup 2021

இதில் அதிகபட்சமாக அபிநவ் மனோஹர் 46 ரன்களையும், பிரவீன் தூபே 33 ரன்களையும் சேர்த்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement