SMAT 2021: Tamil Nadu beat Punjab by 7 wickets (Image Source: Google)                                                    
                                                இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியை எதிகொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தமிழ்நாடு அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக குர்கிராட் சிங் 43 ரன்களையும், ஷுப்மன் கில் 34 ரன்களையும் சேர்த்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.