
Smriti Mandhana Among Nominees For ICC Women's T20I Player Of The Year (Image Source: Google)
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டி29 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தின் நட் ஸ்கைவர், டாமி பியூமண்ட், அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நடப்பாண்டில் விளையாடிய 9 டி20 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் உள்பட 255 ரன்களைச் சேர்த்துள்ளார்.