
Smriti Mandhana Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்க்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சோபியா டங்க்லி 75 ரன்னும், டேனியல் வையட் ஹாட்ஜ் 66 ரன்களையும் சேர்த்தனர். இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 47 ரன்களையும், அரைசதம் கடந்து அசத்திய ஸ்மிருதி மந்தனா 57 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.