மகளிர் சர்வதேச கிரிகெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக சாதங்களை விளாசிய வீராங்கனை எனும் தனித்துவ சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இராண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தியதுடன், 110 ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்து தஹ்லியா மெக்ராத் 56 ரன்களையும், ஆஷ்லே கார்ட்னர் 50 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதுடன் 105 ரன்னில் விக்கெட்டை இழழக்க, அவரைத்தொடர்ந்த் ஹர்லீன் தியோல் 39 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் இந்தியா மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றி தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில் சதமடித்தை சேர்த்து ஸ்மிருதி மந்தனா இந்தாண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தமாக 4 சதங்களை விளாசியுள்ளார்.
Smriti Mandhana becomes the first batter to score four hundreds in a calendar year in Women ODIs!#Cricket #Australia #IndianCricket #AUSvIND pic.twitter.com/RDXztmA2tB
— CRICKETNMORE (@cricketnmore) December 11, 2024
இதன்மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக சாதங்களை விளாசிய வீராங்கனை எனும் தனித்துவ சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். முன்னதாக ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களையும், அக்டோபரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு சதத்தையும் ஸ்மிருதி மந்தனா பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இதற்கு முன் ஒரு வருடத்தில் மூன்று ஒருநாள் சதங்கள் அடித்து சாதனை படைத்த ஏழு வீரர்கள் உள்ளனர். அதன்படி தென் ஆப்பிரிக்காவின் லார வோல்வார்ட் (2024), ஆஸ்திரேலியாவின் மெக் லெனிங் (2016), இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் (2023), நியூசிலாந்தின் சோஃபி டிவைன் (2018), பாகிஸ்தானின் சித்ரா அமீன் (2022), நியூசிலாந்தின் எமி சாட்டர்த்வைட் (2016) மற்றும் ஆஸ்திரேலியாவின் பிளெண்டா கிளார்க் (2007) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now