தி ஹண்ரட்: தொடரிலிருந்து வெளியேறினர் மந்தனா, ஹர்மன்ப்ரீத்!
தனிப்பட்ட காரணங்களினால் தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் இந்தியா திரும்பவுள்ளனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர். இவர்கள் கடந்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வந்தனர்.
அதைத்தொடர்ந்து தி ஹண்ரட் எனப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஸ்மிருதி மந்தனா சதர்ன் பிரேவ் அணிக்காகவும், ஹர்மன்ப்ரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காகவும் விளையாடி வந்தனர்.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரின் காரணமாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக தி ஹண்ரட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இதுவரை ஹண்ரட் தொடரில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 167 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 104 ரன்களையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now