கேட்சுகளை விட்டதே தோல்விக்கு காரணம் - அக்ஸர் படேல்!
இப்போட்டியில் நாங்கள் அடுத்தடுத்து கேட்சுகளை விட்டது தான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ளா சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ராஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 52 ரன்களையும், வில் ஜேக்ஸ் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 21, ஷாய் ஹோப் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய கேப்டன் அக்ஸர் படேலும் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் அக்ஸர் படேல், “இப்போட்டியில் நாங்கள் அடுத்தடுத்து கேட்சுகளை விட்டது தான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். ஒருவேளை நாங்கள் அதனை தவறவிடாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர்களை 150 ரன்களுக்கு கட்டுப்படுத்தியிருக்கலாம். அதுமட்டுமின்றி பவர்விளேவில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். பவர்பிளே ஓவர்களிலேயே நீங்கள் நாங்கு விக்கெட்டுகளை இழந்தால் சேஸிங் செய்வது எப்போதும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.
160 முதல் 170 ரன்கள் வரை இந்த மைதானத்தில் எட்டக்கூடிய இலக்கு தான். முக்கியமான வீரர்கள் சிலர் ரன் அவுட் ஆவதும், பவர்பிளே ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகள் விழுவதும் என இந்த போட்டியை நாங்கள் கடினமான போட்டியாக மாற்றிவிட்டோம். எது எப்படி இருப்பினும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று பலமான அணியாக திரும்புவோம். ஏனெனில் கடைசி கட்டத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் எதுகுறித்தும் யோசிக்காமல் எங்கள் விளையாட்டை விளையாட வேண்டும்” என்று தெஇர்ஃப்வித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now