
ஐபிஎல் கிரிக்கெட்டின் 15ஆவது சீசன் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அதன்படி வழக்கமாக கிளம்பும் சர்ச்சைகளை போலவே இந்தாண்டும் புது புது சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
யுவேந்திர சாஹல் சமீபத்தில் ஒரு பரபரப்பை கிளப்பியிருந்தார். அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, ஒரு சீனியர் வீரர் தன்னை 15ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட முயன்றதாகவும், நூலிழையில் தப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் மும்பை அணி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது.
இந்நிலையில் சென்னை அணியில் முன்னணி வீரரான ராபின் உத்தப்பாவும் மும்பை அணி மீது குற்றம்சாட்டியுள்ளார். உத்தப்பா ஐபிஎல் தொடரில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதில் முதன் முதலில் மும்பை அணிக்காக தான் கடந்த 2008ஆம் ஆண்டு ஆடினார். அப்போது தன்னை கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார்.