பனியின் தாக்கம் இருந்ததால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை - ஜோஸ் பட்லர்!
அலெக்ஸ் கேரி - ஜோஷ் இங்கில்ஸ் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை அழுத்ததில் தள்ளினர் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பில் சால்ட், ஜேமி ஸ்மித அகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜோ ரூட் இணை பொறுப்புடன் விளையாடி மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதம் கடந்திருந்த ஜோ ருட் 68 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 165 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார்.
Trending
அதேசமயம் மற்ற வீரர்களில் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காததால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியிலும் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேத்யூ ஷார்ட் 63, மார்னஸ் லபுஷாக்னே 47 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலில்ஸ் - அலெக்ஸ் கேரி இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலெக்ஸ் கேரி 69 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்கால் இருந்த ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், “இது ஒரு அருமையான ஆட்டமாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடியது. நாங்கள் இன்று நல்ல ஸ்கோரை அடித்தோம். ஜோஷ் இங்கிலிஸின் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற உதவியது. தொடக்கத்தில் நாங்கள் 350 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். அதற்கேற்றவாறு நாங்கள் சரியான இலக்கையும் நிர்ணயித்தோம்.
ஆனால் நாங்கள் பந்துவீசும் போது பனியின் தாக்கம் இருந்ததால் எங்களால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை. சூழ்நிலைகளில் என்ன நடந்தாலும், 350 ரன்களை சேஸிங் செய்வது எப்போதும் ஒரு அற்புதமான முயற்சி. எங்கள் அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அனைத்து வடிவங்களிலும் அவர் டாப் ஆர்டரில் சிறந்த வீரராக இருக்கிறார். இந்த வடிவத்தில் அவர் நம்பமுடியாத அளவிற்கு நிலையாக உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அவர் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தோல்வியைத் தழுவியது ஏமாற்றமளிக்கிறது. அதேபோல் ஜோ ரூட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தனர் என்று நினைக்கிறேன். ஆனால் அலெக்ஸ் கேரி - ஜோஷ் இங்கில்ஸ் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை அழுத்ததில் தள்ளினர். சில நேரங்களில் எதிரணிக்கு நாம் பாராட்டை கொடுத்து தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now