
Sonu Sood applauds CSK spinner Karn Sharma for his support to Sood foundation (Image Source: Google)
இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை தனது கோரமுகத்தை வெளிக்காட்டி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் பல்வேறு பிரபலங்களும் நிதியுதவி வழங்கியும், தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இதில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், இந்திய மக்களுக்கு செய்துவரும் உதவிகளால் நிஜ உலகின் ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார்.
இருப்பினும் தனது பணியை ஓய்வில்லாமல் செய்து வரும் அவர் தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு, மருத்துவ உபகரணங்கள் உபகரணங்கள் இன்றி அவதிப்படுபவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் தனது பவுண்டேஷன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.