WBBL 2021: முதல் முறையாக கோப்பையை தூக்கியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மகளிர் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் இறுதி ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த மகளிர் பிக் பேஷ் லீக் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மகளிர் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பெர்த் அணிக்கு கேப்டன் சோபி டிவைன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
Trending
இறுதியில் மரிசான் கேப் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சோபி டிவைன் 35 ரன்களையும், மரிசான் கேப் 31 ரன்களையும் சேர்த்தனர்.
அதன் பின் இலக்கைத் துரத்திய அடிலெய்ட் அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மகளிர் அணியை வீழ்த்தில் முதல் முறையாக மகளிர் பிக் பேஷ் லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி மரிசான் கேப் ஆட்டநாயகியாகவும், தொடர் முழுவதும் அசத்தலாக விளையாடிய இந்தியாவைச் சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Win Big, Make Your Cricket Tales Now