
Sophie Ecclestone's impressive 3/25 helps England win the third T20I against India and seal the seri (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமனிலையில் இருந்தன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, மேகனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஹேமலதா, ஸ்நே ராணா என அனைவரும் சொற்ப ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர்.