
நடப்பு ஐபிஎல் சீசனின் 15ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கடைசிப் பந்தை தாழ்வாக செல்லும் வகையில் லோ ஃபுல்-டாஸாக வீசி இருந்தார் ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல்.
அந்த பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த லக்னோ வீரர் ஆவேஷ் கான் மிஸ் செய்தார். பந்து ஸ்டம்பை தகர்க்கத் தவறியது. இருந்தும் ரன் எடுக்க ஓட்டம் பிடித்தனர் லக்னோ வீரர்கள். அதே நேரத்தில் அதை தடுக்கும் வகையில் பந்தை பற்றியவுடன் ஸ்டம்பை தகர்க்கும் நோக்கில் வலது கையில் அணிந்திருந்த கையுறையை நீக்கி இருந்தார் ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.
இருந்தும் சரியான நேரத்தில் அவர் பந்தை பற்றி ஸ்டம்புகளை தகர்க்க தடுமாறினார். அந்த நேரத்திற்குள் ஒரு ரன்னை எடுத்து முடித்தனர் லக்னோ அணியின் ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான். தினேஷ் கார்த்திக்கின் இந்த மோசமான செயல்பாடு குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டினர். அவர் அதை சரியாக செய்திருந்தால் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்திருக்கும். அந்த ஒரு ரன்னையும் எடுத்திருக்காது. ஆட்டம் சூப்பர் ஓவர் வரை நகர்ந்திருக்கும்.
Hit-wicket, missed run-out chance in non-striker end, fumble by wicket-keeper & LSG winning it.
— Johns. (@CricCrazyJohns) April 10, 2023
A perfect climax. pic.twitter.com/QszvUN6RrU