Advertisement

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சவுரவ் கங்குலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சவுரவ் கங்குலி!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சவுரவ் கங்குலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 25, 2023 • 10:57 PM

இந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதேசமயம் வரும் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 25, 2023 • 10:57 PM

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், இந்திய தேர்வு குழு வெளியிட்ட 17 பேர் கொண்ட அணியிலிருந்து முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி, ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளார். 

Trending

தனது அணியை வெளியிடுவதற்கு முன்பாக பேசிய அவர் “அக்சர் படேலை அவர் பேட்டிங் செய்யும் திறன் காரணமாக சாஹலுக்கு முன்னே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். எனவே இது ஒரு நல்ல தேர்வு என்று நான் நினைக்கிறேன். யாராவது காயம் அடைந்தால் சாஹல் அணிக்குள் வர முடியும். இது 17 பேர் கொண்ட அணி எப்படியும் இரண்டு பேரை வெளியேற்றி ஆகவேண்டும். 

பேட்டர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் திலக் வர்மா அவரது இடத்தில் உள்ளே வர முடியும். வேகப் பந்துவீச்சாளர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் பிரசித் கிருஷ்ணா உள்ளே வருவார். இதுபோலவே சுழற் பந்துவீச்சாளர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் சாஹல் வருவார்” என்று கூறியிருக்கிறார். 

கங்குலி தன்னுடைய அணியில் பிரதான பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். விக்கெட் கீப்பர்களாக இசான் கிஷான் மற்றும் கே.எல் ராகுல் இருக்கிறார்கள்.

மேலும் தன்னுடைய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாக்கூரை தொடர்ந்திருக்கிறார். சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் இருக்கிறார்கள். இவரது அணியில் பிரதான சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார்.

வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் மூவரும் இருக்கிறார்கள். இவரது அணியில் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சவுரவ் கங்குலி தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement