பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி விலகல்?
பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து கங்குலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்றார்.
இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த 2019ஆம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய பொறுப்பால் முதலில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், போக போக அதிருப்தி அடைந்தனர். கங்குலியின் தலையிட்டால் தான் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதே போன்று பிசிசிஐ தந்த அழுத்தத்தால் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து கங்குலி விலக, பிறகு ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகினார். இதனால் கங்குலி மீது கோலி ரசிகர்கள் கடும் கோபம் பட்டு ட்விட்டரில் விமர்சனம் செய்தனர்.
Trending
இந்நிலையில், கங்குலி வெளியிட்டுள்ள ஒரு டிவிட், ரசிகர்களிடையே குழப்பததை ஏற்படுத்தியுள்ளது. அதில், கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து இதோடு 30 வருடம் ஆகிறது. 30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளிக்க மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை துவங்க போகிறேன். நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
நான் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதிய அத்தியாயத்திற்கு உங்களின் ஆதரவு தேவை என்று கங்குலி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து அரசியலில் குதிக்க போவதாக தகவல் வெளியானது. ஜெய்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதால், அவர் பாஜகவில் இணையலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, கங்குலி ராஜினாமா செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இதனால் கங்கலி எதற்கு இந்த டிவிட்டை போட்டார். இல்லை வேறு ஏதாவது அரசியல் கட்சியில் இணைய போகிறாரா இல்லை இது வெறும் விளம்பர யுத்தியா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், கங்கலியை இழுக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவருக்கு உடல் நலம் குன்றியதால், அந்த பிளான டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now